கொரோனா ஊரடங்கின் போது லண்டன் பூங்காவில் ஒரு ஜோடி பட்டப்பகலில் உல்லாசம் அனுபவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமே உருக்குலைந்த நிலையில், இங்கிலாந்திலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். தலைநகர் லண்டனும் ஏராளமானோரை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த துயரம், இங்கிலாந்தை உலுக்கிக் கொண்டிருக்க, மற்றொரு புறம், எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவம் ஒன்று லண்டன் நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்திலும் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், அவசரத் தேவைக்காக வெளியே மக்கள் வரலாம் என்றும் உடற்பயிற்சி செய்வதற்கு பூங்காக்களுக்கும் குறிப்பிட்ட நேரம் வரை அனுமதி கொடுத்துள்ளது.
ஆனால், ஊரடங்கின்போது உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை, ஒரு ஜோடி உல்லாசம் அனுபவிக்க பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ‘செயின்ட் ஜேம்ஸ்’ என்ற பெயரில் ஒரு பூங்கா உள்ளது.
இந்த பூங்காவிற்கு கடந்த சனிக்கிழமை பிற்பகலில் வந்த ஒரு ஜோடி, அங்குள்ள நடைபாதையில் படுத்து உல்லாசம் அனுபவித்துள்ளது.
இதில் பலரும் அவ்வழியாக நடந்து சென்றது மட்டுமின்றி, சைக்கிளிலும் சென்று வந்துள்ளனர். ஆனால் இதனை எதையும் கொண்டுகொள்ள காதல்ஜோடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளது.
அப்பொழுது அவ்வழியாக ரோந்து பணியில் வந்த பாதுகாவலர்கள் இதனைக் கண்டு, கேள்வி கேட்ட போது அவர்களிடமும் வாங்கவாதத்தில் குறித்த ஜோடி ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், பதிலுக்கு பதில் பேசிய பாதுகாவலர்களோ உல்லாச ஜோடியை கடுமையாக எச்சரித்து அனுப்பாமல் சற்றுத் தள்ளி நின்றவாறே கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க ‘சமூக இடைவெளி அவசியம் தேவை’ என விளக்கிக் கூறியுள்ளார்.
இதனை அவ்வழியாக சென்ற நபர் செல்போனில் புகைப்படமாக வெளியிட, இதைப் பார்த்த பலரும் பயங்கர மோசமாக திட்டி வருகின்றனர்.