இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் முடிந்த தம்பதிகள் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டு இருந்து வருகின்றனர்.
இந்த வருத்தத்திற்கு பல காரணங்கள் உள்ள நிலையில், எதிர்காலம் சிறப்பாக அமைய இருபாலரும் தொடர் பணியாற்றி கொண்டு, பணியில் வரும் மன அழுத்தத்திற்கு அதிகளவு உள்ளாகின்றனர்.
இதனால் தாம்பத்தியத்தில் ஈடுபட இயலாத நிலைமை வருவதை எண்ணி வருத்தமடைகின்றனர். தம்பதிகளுக்குள் தாம்பத்திய வாழ்க்கையானது சிறப்பாக அமையும் பட்சத்தில், எந்த விதமான சண்டைகள் இன்றி தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொண்டாடுவார்கள்.
இந்நிலையில், தாம்பத்தியத்தில் சில உணவு முறைகளை கடைப்பிடித்தாலே போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்..
செலரி
தாம்பத்தியத்தில் ஈடுபட நினைக்கும் தம்பதிகள் செலரியை சாப்பிடுவது நல்லது. இதில் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் பொருட்கள் கொண்டுள்ளது. இதில் இருக்கும் ஆண்டிரோஸ்ட்டிரோன் மூலமாக, ஆணுக்கு வியர்வையில் வெளியாகும் நறுமணமானது பெண்களால் அதிகளவு கவரப்படுகிறது. இந்த செலரியை பச்சையாக சாப்பிடும் பட்சத்தில், தாம்பத்தியத்தை துவங்கும் முன்னர் அல்லது மாலை வேலையில் சாப்பிடலாம்.
கடல் சிப்பி
கடல் சிப்பியில் அதிகளவு ஜின்க் சத்தானது உள்ளது. இந்த ஜின்க் சத்துக்கள் மூலமாக விந்தணுக்களின் அளவு அதிகரிப்பதோடு., டெஸ்டிரோஜனின் உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் பாலுணர்ச்சிக்கான ஹார்மோன் அதிகரித்து, தாம்பத்தியத்தை கொண்டாட வைக்கிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் அதிகளவு புரோமோலின் நொதிகளானது உள்ளது. இது பாலுணர்ச்சியை அதிகரித்து, ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனையை சரி செய்கிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், பி வைட்டமின் சத்துக்களால், உடலின் ஆற்றலானது அதிகரிக்கிறது.
அவகோடா
அவகோடா பழத்தில் இருக்கும் போலிக் அமிலத்தின் காரணமாக, உடலுக்கு அதிகளவு ஆற்றலை அதிகரித்து கொடுக்கிறது.
இதுமட்டுமல்லாது வைட்டமின் பி6 காரணாமாக, ஆண்களின் ஹார்மோன் அதிகரித்து, தைராய்டு சுரப்பியினை சீராக செயல்பட வைக்கிறது. இதனால் இருபாலருக்கும் பாலுணர்ச்சி அதிகரித்து, தாம்பத்தியத்தில் சிறப்பாக ஈடுபட முடிகிறது.
பாதாம்
பாதாமை தினமும் ஆண்கள் சாப்பிட்டு வந்தால், ஹார்மோனின் உற்பத்தி அதிகரித்து, பாதாமின் நறுமணம் பெண்களை ஈர்க்கும். பாதாமை பச்சையாக சாப்பிடுவது நல்லது.
மாம்பழம்
மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களில் உள்ள சுவை மற்றும் மனம் அருமையாக இருப்பதால், தம்பதிகள் தாம்பத்திய விளையாட்டில் ஊட்டிவிட்டும் விளையாடலாம். மேலும், இவை தாம்பத்திய இரவின் கொண்டாட்டத்திற்கு அருமையான உதவி செய்யும்.
முட்டை
தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக இப்பழங்களை மறந்து விடாதீர்கள். முட்டையில் இருக்கும் வைட்டமின்கள் மூலமாக ஹார்மோன்களின் மாற்றத்தை சீராக்க உதவி செய்து., மன அழுத்தத்தினை குறைகிறது.
அத்திப்பழம்
அத்திப்பழத்தில் இருக்கும் அமினோ அமிலங்களின் காரணமாக தாம்பத்யத்திற்கான பலத்தை அதிகரிக்க உதவும். அத்திப்பழங்களை சாறாகவோ அல்லது பழமாகவோ சாப்பிடலாம்.
பூண்டு மற்று சாக்லெட்
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்னதாக பூண்டை சாப்பிட்டால், துணை இதழோடு இதழ் பதிக்க யோசனை செய்வார். ஆனால்., இதில் இருக்கும் அலிசன்மூலப்பொருள் காரணமாக, தாம்பத்திய உறுப்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வழிவகை செய்யும்.
சாக்லெட்டை சாப்பிடுவதால் காதல் உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்திய இன்பம் அதிகரிக்கும்.