கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வது தொடர்பில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அளிக்கும் நிதியை உலக சுகாதார நிறுவனத்தால் சிறந்த பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதா என்பது குறித்து தனக்கும் தமது அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த கவலைகள் இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்திக்கையில், அந்த அமைப்பு அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்றது எனவும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தொடர்பில் சீனா அளித்த தவறான தகவல்களை அந்த அமைப்பு முன்னிலைப்படுத்தியது என குற்றஞ்சாட்டிய டிரம்ப், இல்லை எனில் உலக நாடுகள் கண்டிப்பாக கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் என்றார்.
சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்த துல்லியமான தகவல்கள் சரியான நேரத்தில் பகிரப்படுவதை உறுதிசெய்ய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உலக சுகாதார அமைப்பை உலகம் சார்ந்துள்ளது என்று ஜனாதிபதி கூறினார்.
அதன் வெளிப்படையான தோல்விகளுக்கு அமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்ற டொனால்டு ட்ரம்ப்
ஆனால் அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் தொடர அமெரிக்கா அந்த அமைப்புடன் தொடர்ந்து ஈடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.