Loading...
யாழ் மணல்காடு கடற்பரப்பில் 133 கிலோ 57 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா தொகையை இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த மூவரே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதியானது சுமார் 2 கோடி என கடற்படையினர் தெரிவித்தனர்.
Loading...
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் பருத்தித்துறை பகுதியில் வசிக்கும் 22, 26 மற்றும் 37 வயதுடையவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...