பிக்பாஸ் புகழ் ஜூலி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு பயிற்சி ஒன்றையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் மிக விரைவில் செவிலியர் பணிக்கு திரும்பி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருடைய வாழ்க்கை மாறியது. தொடர்ந்து படங்களில் நடிப்பதற்காக தன்னை தீவிரமாக தயார் செய்து வருகிறார்.
Updated myself ? pic.twitter.com/ADXGsC8o3a
— எம் ஜூலி (M JULEE) (@lianajohn28) April 13, 2020
ஆரம்ப காலத்திலேயே அவர் செவிலியராக பணியாற்றி வந்தது அனைவரும் அறிந்ததே. இவர் சினிமாவில் அதிக நாட்டம் காட்டியதால் திரும்பியும் செவிலியர் பணிக்கு செல்வார் என்று யாரும் நினைக்கவில்லை.
இந்த நேரத்தில் ஜூலி எடுத்திருக்கும் இந்த முடிவு பாராட்டத்தக்கது. தொடர்ந்து பயணியுங்கள் ஜூலி. உங்களின் சேவை நாட்டுக்கு தேவை என்று பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.