களுத்துறை கட்டுகருந்த பிரதேசத்தில் நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீதியில் உயிரிழந்து கிடந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நபர் காலி வீதிக்கு அருகில் உள்ள வீதியில் சுகயீனமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் 1990 என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவைக்கு அழைப்பு மேற்கொண்ட போதிலும் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அவ்விடத்திற்கு வருவதற்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டமையினால் அவரை சோதனையிட்ட பாதுகாப்பு ஆடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆராய்வதற்காக சடலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அம்பியுலன்ஸ் உரிய நேரத்தில் வருகைத்தந்திருந்தால் குறித்த நபரை காப்பாற்றியிருப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.