நாட்டில் இன்று பல இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிமை மையம் எதிர்வு கூறியுள்ளது.
பெரும்பாலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என்று வானிமை மையம் தெரிவித்துள்ளது.
இதன்போது மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் தென்மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது சாதாரண முதல் மிதமான கொந்தளிப்பாகக் காணப்படும்.