சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், அணு ஆயுதங்களை உருவாக்கி அதன் மூலம் போட்டி ஏற்படாமல் இருக்க அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் 1996-ம் ஆண்டு அணு ஆயுத சோதனைக்கான தடை ஒப்பந்தத்தில் இணைந்தன.
ஆனால் சீனாவோ தான் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தை பின்பற்றி வருவதாக கூறி வருகிறது.
இந்நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் அணு ஆயுத சோதனை தளமாக உள்ள லோப் நூர் பகுதியில் சீன அரசு கடந்த சில வருடங்களாக இரகசிய அணு ஆயுத சோதனையில் ஈடுப்பட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
அங்கு நடைபெறும் அணு ஆயுத சோதனையில் அதிர்வுகள் வெளியே வராத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு ரகசியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல் அமெரிக்காவின் ஆயுத்க்கட்டுப்பாட்டு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
லோப் நூர் பகுதியில் கடந்த சில வருடங்களாக வெளியான கதிரியக்கத்தின் அளவு மற்றும் நில அதிர்வுகள் குறித்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியில் சீன அரசு ரகசியமாக குறைந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துக்குடிய அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.
கொரோனா ஒரு பக்கம் பரவிவரும் நிலையில் தனது ஆயுத பலத்தை அதிகரிக்க ரகசியமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வரும் சீனா மீது உலக நாடுகள் மிகுந்த ஆத்திரமடைந்துள்ளன.