ஜாதகம் என்பது நட்சத்திர நிலைப்பாட்டை கொண்டு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும், அவர் பிறந்த நேரத்தை துல்லியமாக கொண்டு கணிக்கப்படுவது ஆகும்.
இந்த நட்சத்திரங்களின் நிலைப்பாட்டை கொண்டு தான் இந்து முறையில் ஒருவரது ராசி, நட்சத்திரம் போன்றவை குறிக்கப்படுகின்றன.
இதை கொண்டு உருவாக்கப்படும் ஜாதகத்திற்கு என தனிப்பட்ட நன்மை, தீமை கூட கூறப்படுகிறது.
இதை வைத்து, இவர்களது வாழ்வில் ஒவ்வொரு காலத்திலும் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்பதையும் கூறுகின்றனர்.
மேலும், குரு பெயர்ச்சி, ராகு கேது பயிற்சி பலன்களும் கூட காலத்திற்கு ஏற்ப தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகு, கேது என்ற கிரகங்கள் மற்றவையோடு ஒப்பிடுகையில் மிகவும் வலிமையானவையாக கருதப்படுகின்றன.
இவை இரண்டும் சேர்மங்கள், கனிமங்கள் என்பதில் வராது, வேதியியல் படி இவை இரண்டையும் கிரியா ஊக்கி என்று குறிப்பிடுகிறார்கள்.
ராகு கேது இரண்டும் எந்த கிரகத்துடன் சேர்கிறதோ, அவற்றின் அடிப்படை குணத்தை பிரதிபலித்து பலன்கள் அளிப்பவை என ஜோதிட நிபுணர்களால் கூறப்படுகிறது.
நல்ல கிரகங்களுடன் சேர்ந்தால், நல்ல பலனும், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் தீய பலனும் அளிக்கும் குணமுடையவை ராகுவும், கேதுவும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலை சம்பவங்கள், முயற்சிகள் கூட கேது புத்தியில் தான் அதிகம் நடக்கின்றன என்றும், ஜோதிட ஆய்வாளார்கள் குறிப்பிடுகின்றனர்.