பிரித்தானியாவில் அதிகரித்து காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து, பிரிட்டன் வாழ் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமானால், பிரிட்டனில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு முழுமையாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அந்நாட்டு சுகாதார செயலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் இந்த சூழலில் இருந்து முழுமையாக வெளியேற ஒரே ஒரு வழிதான் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு எங்களுக்கு ஒரு தடுப்பூசி கிடைக்க வேண்டும். அதுவரை, நாம் சமூத்தை பாதுகாப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்து, நாட்டின் ஆரோக்கியத்திற்கும் நமது பொருளாதாரத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என சுகாதார துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ள, கொரோனா வைரஸிற்கான சமூக இடைவெளி நடவடிக்கைகள் படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டும். ஆகவே முழுமையாக அகற்றப்படுவதற்கு காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் முயற்சியில் மூன்று வார அவசரகாலம் வீட்டிலேயே இருத்தல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விதிகளை நீட்டிப்பதற்கான அறிவிப்பை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது குறைந்தது 12,868 பேரின் இறப்புக்களை அடிப்படையாக கொண்ட நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போரிஸ் ஜோன்சனுக்காக பிரதிநிதித்துவப்படுத்தும் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தலைமையில் கோப்ரா என அழைக்கப்படும் அரசாங்கத்தின் அவசரக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, அமைச்சரவை அமைச்சர்கள் வீடியோ மாநாடு மூலம் சமீபத்திய அறிவியல் மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவார்கள். இதன் பின் இன்று பிற்பகல் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.