ஒருவரது காதல் தோல்வியடைவதற்கு பின் பல காரணங்கள் இருக்கலாம். முதல் காதலில் தான் நாம் இதுவரை அனுபவித்திராத சில உணர்வுகளை உணர ஆரம்பித்திருப்போம்.
அந்த அனுபவங்கள் மற்றும் உணர்வுகள் என்றுமே வாழ்வில் மறக்க முடியாதவைகளே.
ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் குணாதிசயங்கள் வேறுபட்டிருக்கும். அதில் சில ராசிக்காரர்கள் தங்களின் முதல் காதலை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் தினந்தோறும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படி எந்த ராசிக்காரர்கள் தங்களின் முதல் காதலை வாழ்நாள் முழுவதும் நினைத்திருப்பார்கள் என்பதை இப்போது காண்போம்.
விருச்சிகம்
மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய ராசிக்காரர்களாக அறியப்படும் விருச்சிக ராசிக்காரர்களின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்களுள் பெரும்பாலானோர் அவ்வளவு எளிதில் யாரையும் நம்பமாட்டார்கள். எனவே, முதல் காதலின் போது அவர்களுக்கு முதலில் வருவது நம்பிக்கை. அதன் பின்னரே காதல் மலருகிறது. முதல் காதல் நம்பிக்கையைப் பற்றியது. இந்த காதல் ஒருமுறை உடைந்தால், அவர்கள் மீண்டும் காதலில் வேறு யாரையும் நம்புவது மிகவும் கடினம். இதன் காரணமாகவே, இவர்களுக்கு முதல் காதல் மறக்க முடியாத ஒன்றாக, வாழ்நாள் முழுவதும் நினைவில் உள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஆழ்ந்த உணர்ச்சிவசப்படக்கூடிய ராசி. இந்த ராசிக்காரர்கள் காதலிப்பவருடன் மிகவும் ஆழமாக இணைக்கப்படுவார். இதனால் முதல் காதலின் அனுபவம் அவர்களின் வாழ்க்கையில் மிக ஆழமான உணர்ச்சி மதிப்பைக் கொண்டது. மேலும் இவர்கள் தன் முதல் காதலை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள். இருப்பினும் பிரிய வேண்டிய சூழ்நிலையில் பிரிந்த பிறகு, தன் முதல் காதலின் நினைவுகள் அவர்களை விட்டு செல்வது என்பது சாத்தியமற்றது. கடக ராசிக்காரர்கள் அன்பையும், உறவுகளையும் அதிகம் மதிப்பவர்கள். புதிய நபர்களுடன் அவ்வளவு எளிதில் சௌகரியமாக பழகமாட்டார்கள். இதனால் இவர்கள் மற்றொரு காதலில் விழுவது கடினம். அப்படியே காதலித்தாலும், முதல் காதலில் பெற்ற அன்பும் ஆறுதலும் கிடைக்கப் பெறாமல் தவிப்பார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் ரொமான்டிக்கான குணத்தைக் கொண்டவர்கள். நல்ல கற்பனை வளம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கான கற்பனை உலகை உருவாக்கி, அதில் காதல் உட்பட அனைத்தும் சரியானவையாக அமைய வாழ்வார்கள். மேலும், இவர்கள் முதல்முறையாக காதலில் விழும் போது, காதலனுடன் பார்த்த முதல் படம், அவர்கள் ஒன்றாக ரசித்த பாடல், பார்வையிட்ட இடங்கள் போன்ற பலவற்றை நினைவில் மறக்காமல் வைத்துக் கொள்வார்கள். இதனால் முதல் காதல் தோல்வியடையும் போது, அந்த நினைவுகள் வாழ்நான் முழுவதும் மறவாமல் நினைவில் இருந்து கொண்டே இருக்கின்றன.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் பிடிவாதம் மற்றும் தலைச்சிறந்த குணங்களால், அவர்களின் முதல் காதலை மறப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. எவ்வளவு காலமானாலும், முதல் காதலை மறக்கமாட்டார்கள். மேலும், ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் அர்ப்பணிப்புள்ள காதலர்கள். அவர்கள் தங்கள் காதலை வலுவாக்க எல்லா முயற்சிகளையும் செய்வார்கள். அதிலும் அது முதல் காதலாக இருக்கும் போது, முயற்சிகள் இன்னும் அதிகமாக இருக்கும். இந்த காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ரிஷப ராசிக்காரர்களை வாழ்நாள் முழுவதும் தங்களின் முதல் காதலை மறக்காத வண்ணம் செய்கின்றன.