நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை அடிப்படையில் புதிய வாகனங்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நிதி அமைச்சின் செயலாளர் சமரதுங்க மூலமாக ஒப்புதல் பெற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மிகவும் அவசர அவசராமாக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு நிறுவனம் ஒன்றை தேர்ந்தெடுக்கவில்லை.
அத்துடன் அமைச்சரவையின் அனுமதியை பெறவில்லை என்பதாலேயே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் பெற்றுக்கொடுக்கும் வரை இரண்டு இலட்சம் ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2016 ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஹர்ஷன ராஜகருணா உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை அடிப்படையில் பல வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் வாகனங்களை பெற்றுக் கொடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரண்டு இலட்சம் ரூபா தவறாமல் வழங்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இவ்வாறான வேலைத்திட்டம் தொடர்பில் கொடுக்கப்படும் அழுத்தம் தொடர்பில் தற்பொழுது பல அமைச்சின் செயலாளர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியின் கீழ் இடம்பெற்ற இக் கொடுப்பனவு தொடர்பில் அரச அதிகாரிகள் இவ்வாறான செயல்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் உடன்பட்டுள்ளனர்.
இதேவேளை தனது பதவிக்காலத்தினை நீடித்துக் கொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நிதி அமைச்சின் செயலாளர் இந்த வேலை திட்டத்திற்கு கையெழுதிட திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.