தமிழகத்தில் உள்ள இலங்கை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை சாா்பில் கூறப்படுவதாவது- இலங்கையைச் சோ்ந்த சிங்கள இளைஞா் அஜய்குமாா் (30). இவா், கடந்த 2017 இல் கடவுச்சீட்டு இன்றி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாா் பகுதியில் கடல் வழியாக தமிழகம் வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டாா்.
அவா் மீது வெளிநாட்டவா் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்ட நிலையில், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா். ஆனால், அவா் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அவா் கடந்த மாா்ச் 17 ஆம் திகதி முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த முகாம் அலுவலா்கள் அவரை தீவிரமாகத் தேடிவந்தனா். ஆனாலும், அவரைக் கண்டறிய முடியவில்லை.
ஆகவே மண்டபம் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த சிறப்பு துணை ஆட்சியா் சிவகுமாரி அளித்த புகாரின் பேரில் மண்டபம் பொலிசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.