அமெரிக்காவில் இறுதிச்சடங்கு கூடத்துக்குள் நுழைந்த நபர் திடீரென தனது உடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Pennsylvania-வில் உள்ள இறுதிச்சடங்கு கூடத்தில் உயிரிழந்த நபரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு கையில் மதுபாட்டிலுடன் நுழைந்த ஒருவர் திடீரென தனது உடைகளை களைந்து நிர்வாண நிலையில் நின்றார்.
பின்னர் மது பாட்டிலை அங்கிருந்த சவப்பெட்டிக்குள் வைத்தார்.
இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவரின் பெயர் Ethan Palazzo என தெரியவந்தது.
எதற்காக இறுதிச்சடங்கு கூடத்துக்குள் வந்தேன் என கூற மறுத்த Ethan Palazzo, தனது காதலியிடம் பேச வேண்டும் என கூறினார்.
Ethan Palazzo வெளியில் இருந்த கார் கண்ணாடியை உடைத்தார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அவரை பொலிசார் அழைத்து சென்று விசாரித்த நிலையில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.