சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். தனவரவு திருப்தி தரும்.நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். கடன் தொல்லைகள் குறையும்.
இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
நன்மைகள் நடைபெறும் நாள். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணவிரயம் உண்டு. பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
தைரியத்தோடு செயல்பட்டுச் சாதனைகள் படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உறவினர் பகை மாறும். பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியத் தொல்லை அகலும்.
அஞ்சல் வழியில் ஆச்சர்யமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனை கட்டிக்குடியேறும் எண்ணம் மேலோங்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.
செல்வநிலை உயரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும். புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் மேலோங்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். சொல்லை செயலாக்க துடிப்போடு செயல்படுவீர்கள். கொடுக்கல்– வாங்கல்களில் கொஞ்சம் கவனம் தேவை.
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.தெய்வ வழிபாடுகளால் திருப்தி ஏற்படும். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.
பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோவில் திருப்பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
வாகனப் பராமரிப்பில் கவனம் செலுத்தும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திருப்பம் ஏற்படலாம். குடும்பப் பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடக்க முற்படுவீர்கள். வரவு திருப்தி தரும்.
வசதி வாய்ப்புகளைப் பெருக்கி கொள்ள முயற்சி எடுக்கும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். அஞ்சல் வழியில் அனுகூலச் செய்தி உண்டு.
எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் மடல் மூலம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியமொன்று இனிதே முடியும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.