கொரோனா வைரஸுக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்கும் வரை ஒருவருடம் வரை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானொலி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“ சமூக விலகலை கடைப்பிடிக்கும் எதிர்காலத்திற்கு நாம் பழக வேண்டிய தேவை இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுப்பிடிக்கும் வரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.
அதற்கு ஒருவருடம் கூட ஆகலாம். ஆனால் அதனை பற்றி நான் இப்போது ஊகிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இதுவரை 6,468 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
எனினும் தற்போது அவுஸ்திரேலியாவில் கொரோனோ தொற்று தீவிரம் தற்போது குறைந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் கூடுவதற்கும் பயணங்களுக்கும் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகள் விதித்தன.
இந்நிலையில் கொரோனா தொற்று தீவிரம் குறைந்துள்ள நிலையில், அக்கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.