கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை குழப்பும் நோக்கில்,
சமூக வலைத் தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரசாரம் செய்த 17 சந்தேக நபர்கள் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
பண்டாரகம, கண்டி, தெஹிவளை, மஹரகம, நுகேகொடை, காலி, வாதுவ, அங்கொடை, பொல்கஹவெல, பெலிகல, கட்டுகஸ்தோட்டை, வெலிமடை, கடவத்தை, ராகம, நொச்சியாகம மற்றும் மீரிகம, திவுலதெனிய பகுதிகளைச் சேர்ந்த 17 பேரே இவ்வாரு கைது செய்யப்ப்ட்ட்யுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந்த 16 பேரில் 7 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 10ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலபப்குதியில் கைது செய்யப்பட்டவர்களாவர்.
9 பேர் அதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நேற்றைய தினமும், ஐ.தே.க. யின் செயற்பாட்டாளர்களில் ஒருவராக கருதப்படும் மீரிகம, திவுலதெனிய பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரை சி.ஐ.டி. கைது செய்தது.
அவர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்டார். இதன்போது, அவர் சார்பில் சட்டத்தரணிகளான அஜித் பி. பெரேரா மற்றும் குனரத்ன, வன்னிநாயக்க உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இதன்போது சி.ஐ.டி.யினர் குறித்த பெண் வெளியிட்ட பேஸ் புக் பதிவுகள் பலவற்றை மன்றுக்கு முன்வைத்து தண்டனை சட்டக் கோவை மற்றும் தொறு்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அங்கு முன்வைக்கப்பட்ட பல பேஸ் புக் பதிவுகள், பதிவாளரின் சொந்த கருத்துக்கள் எனவும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் சி.ஐ.டி. அவரைக் கைது எய்துள்ளதாகவும் சந்தேக நபரான பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரனிகள் வாதிட்டனர்.
இந் நிலையிலேயே விடய்ங்களை ஆராய்ந்த நீதிவான், குறித்த பெண்ணை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்தார்.