Loading...
பொதுவாக வெளியில் செல்லும் ஆண்கள் சில பழக்கவழக்கங்களை மாற்றிகொள்ளாமல் இருப்பதால், இன்றைய காலக்கட்டத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளாகிறார்கள்.
Loading...
அப்படி, வீட்டில் எப்படி இருக்கிறோம். வெளியில் எப்படி நடந்துகொள்கிறோம் என்ற பழக்க வழக்க முறைகளை மாற்றிக்கொண்டு எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்..
பெண்களின் உடல் பாகங்களை தவறாக பேசுவது;
- முதலில் ஆண்கள் மாற்றிக்கொள்ளவேண்டியது, ரோட்டில் செல்லும் பெண்கள் அணிந்து செல்லும் உடைகளை கவனித்து தவறாக புரிந்துகொள்வது.
- அவர்களின் தனிப்பட்ட உடல்பாகங்களை கவனித்து பேசுவது. இவற்றை ஆண்கள் தவிர்த்துவிட்டாலே நல்ல ஒரு அபிபிராயம் மற்றவர்கள் மத்தியில் இருந்து ஆண்களுக்கு உண்டாகும்.
காதலர்கள் வெளியில் நடந்துகொள்ளும் முறைகள்;
- காதலர்கள் பொதுவெளிலான பார்க், பீச், தியேட்டர் போன்ற இடங்களில் ரொமான்ஸில் ஈடுபடுவது, பார்ப்பவர்களை மட்டுமில்லாமல் சுற்றி இருப்பவர்களையும் முகம் சுழிக்க வைக்கிறது.
- இதனால் ஆண்களை விமர்ச்சிப்பதை விட பெண்களையே தவறாக விமர்ச்சிக்கப்படுகிறார்கள் இதை தவிர்ப்பது நல்லது.
சரியான நேரத்திற்கு செல்லவேண்டும் (punctuality);
- சரியான நேரத்திற்கு, அலுவலகத்திற்கு செல்லாமல் இருப்பது, குறிப்பிட்ட வேலையை முடிக்க தாமதப்படுத்துவது போன்ற செயல்பாடுகளை தவிர்த்துவிடலாம்.
சுற்றி நடக்கும் விஷயங்களை கவனிக்கவேண்டும்;
- நம்மளை சுற்றி நடக்கும் விஷயங்களை கவனிக்காமல், மொபைல்போன், கேம், டிக்டாக் என இதிலேயே மூழ்கி கிடப்பதால், பொதுவெளியில் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்தில் வைத்துகொண்டலே உங்கள் மீது தனி மதிப்பு உண்டாகும்.
நண்பர்களுடன் உரையாடுவது;
- அடுத்ததாக நண்பர்களுடன் மனசு விட்டு உரையாடுவது மிக அவசியமான ஒன்றாகும். எப்பொழுதும் ஸ்மார்ட்போனிலேயே தொடர்புகொண்டு பேசுவதை விட, நேரடியாக உரையாடுவதால், நமக்கு இருக்கும் மன அழுத்தம் குறையும்.
மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது;
- நண்பர்களுடன் வெளியே செல்லும்போத, மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதால், அதுவே பழக்க வழக்கமாக மாறிவிடுகிறது. இதுபோன்ற பழக்கத்தை மாற்றிக்கொள்வது சிறந்தது.
அடிப்படையான நடவடிக்கைகள்;
- ஒரு ஹோட்டல்லுக்கு செல்லும் போது, சாப்பாடு வந்ததும் உடனடியாக சாப்பிடுவது, அருகில் இருக்கும் நண்பர்கள் சாப்பிட்டு முடிக்கும் முன் எழுந்து செல்வது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது.
செல்வதை கவனிக்காமல் இருப்பது;
- நிறைய பேர் இந்த தவறுகளை அடிக்கடி செய்வார்கள். உதரணமாக ஒருவர் சொல்லும் வார்த்தகளை கவனிப்புடன் கேட்காமல், வேறு ஒரு மனநிலையில் யோசித்தவாறு இருப்பது. இதை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது.
பெரியவர்களை மதிக்காமல் இருப்பது;
- இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள், இணைய வளர்ச்சியில் ஒன்றிணைத்து இருப்பதால், பெரியவர்களிடம் அனுசரித்து பேசும் முறை மற்றும் அவர்களை மதிப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் தவறாக இருக்கிறது.
- அனுபவம் வாய்ந்தவர்களை மதித்து நீங்கள் நடந்துகொள்வதால், மற்றவர்கள் முன் நல்ல குணத்தை உங்களிடன் வெளிக்காட்டும்.
சரியான பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளாமல் இருப்பது;
- எப்பொழுதும், சரியான பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளமல் இருப்பதால், கடைசி வரை தவறான பாதையிலேயே சென்று கொண்டிருப்பீர்கள். முடிந்தவரை நல்ல பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதால் சிறந்து விளங்குவீர்கள்.
Loading...