Loading...
உலகமெங்கும் பரவி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது.
எனினும் இந்த வைரஸ், நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் கடுமையாக பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச சிறுநீரக சொசைட்டியும் (International Kidney Society) இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு,
Loading...
- 25 முதல் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு சிறுநீரகமும் பாதிக்கிறது. ‘அக்கியுட் கிட்னி இன்ஜுரி’ என்ற கடுமையான சிறுநீரக காயம் ஏற்படுகிறது. எனவே கொரோனா வைரஸ், பாதிப்புக்கு ஆளாகிறவரின் நுரையீரல் மட்டுமல்ல, சிறுநீரகமும் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.
- சார்ஸ் வைரஸ் போன்ற கொரோனா வைரஸ், சிறுநீரில் கூடுதலான அளவு ரத்தத்தையும், புரதத்தையும் கசிய செய்கிறது. இது 15 சதவீத நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே கொரோனா வைரஸ் தாக்கினால் நுரையீரலை மட்டுமல்லாது, சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Loading...