சீனாவின் வுகானில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அங்கு கொள்ளை நோய் உருவானது தொடர்பில் மருத்துவர்கள் எச்சரித்தனர்.
இது தொடர்பில் முதன்மையாக செயல்பட்டவர் ஜாங் ஜிக்சியான் என்ற சீன சுவாசக்குழல் நோய் நிபுணராவர். யூஹான் நகரைச் சேர்ந்த பெண் மருத்துவர்தான் இனம் புரியாத கொரோனா வைரஸைக் கண்டுபிடித்தவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸை முதன் முதலில் வயதான தம்பதியினரில் கண்டுபிடித்தவர் இவர்தான். டிசம்பர் மாதம் சாதாரண காய்ச்சல் இருமல் என்று வந்த இரண்டு 2 வயதான தம்பதியினரில் முதலில் வைரஸை இனம் கண்ட மருத்துவர் ஜாங் ஜிக்சியான் என்ற இந்த மருத்துவர் தன் அனுபவத்தை சினுவா செய்தி ஏஜென்சிக்குப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களில்,
மார்கழி 26ஆம் திகதி ஹூபேய் மாகாண மருத்துவமனையான ஒருங்கிணைந்த சீன மற்றும் மேற்கத்திய மருந்து மையத்துக்கு வயதான தம்பதியினர் வந்தனர். இவர்களுக்கு காய்ச்சல், இருமல், களைப்பு இவைதான் அறிகுறிகளாக இருந்தன. இது முதலில் ஃப்ளூ காய்ச்சல் அல்லது நிமோனியா என்றே நினைத்தோம்.
ஆனால் சிடி ஸ்கேன் எடுத்தோம், அந்த படங்களில்தான் நிமோனியா, பொதுவான ஃப்ளூ போன்ற வைரஸாக இல்லாமல் வேறு ஒரு தினுசாக இருந்த வைரசைக் கண்டோம். 2003 சார்ஸ் வைரஸ் வெடிப்பின் போதே பணியாற்றிய அனுபவம் இருந்ததால் ஒரு கொள்ளை நோயின் தன்மையிலான ஒரு வைரஸ் இருப்பதை அறிந்தேன் உடனே அவர்கள் மகனை அழைத்தேன். மகனுக்கும் சிடி ஸ்கேன் எடுத்தேன்.
முதலில் தன்னை சோதிக்கக் கூடாது என்று மகன் எதிர்த்தார். காரணம் அவருக்கு ஒன்றுமேயில்லை நாங்கள் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சிப்பதாகவே அவர் நினைத்தார். ஆனால் சிடி ஸ்கானில் வயதான அந்தத் தம்பதியினருக்குக் காட்டிய அதே நுரையீரல் பிரச்சினைகளை மகனுக்கும் காட்டியது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு வருகிறது என்றால் அது தொற்று நோயாகவே இருக்க வேண்டும். டிச.27 ஆம் திகதி இன்னொரு நோயாளியும் இருமல், காய்ச்சல் என்று வந்தவருக்கு சிடி ஸ்கானில் அதே நுரையீரல் பிரச்சினைகள் தெரிந்தன.
இந்த நால்வரின் ரத்த மாதிரிகளும் வைரஸ் இருப்பதை உறுதி செய்தது. அந்த நாளே மருத்துவமனைக்கும் மாவட்ட நோய்க்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுக்கு ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி, தொற்று நோய் அபாயம் என்று அதில் எச்சரித்திருந்தேன்.
இந்த ரிப்போர்ட்டை அனுப்பிய பிறகு மருத்துவமனையில் இந்த நால்வர் இருந்த அறை தனிமைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அவர்களை அணுகும் மருத்துவ உதவியாளர்களுக்கு காப்புக் கருவிகள் அளிக்கப்பட்டன.
அடுத்தடுத்த நாட்களில் மேலும் 3 பேர் இதே நோய் அறிகுறிகளுடன் வந்து சிடி ஸ்கானில் நுரையீரல் பிரச்சினை இருப்பது தெரியவர பெரிய அளவில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. டிசம்பர் 29 ஆம் திகதி 7 பேர் சிகிச்சை குறித்து 10 நிபுணர்கள் ஆலோசித்தனர்.
அதன் பிறகு வுகானில் உள்ள தொற்று நோய்க்கான சிறப்பு மருத்துவமனைக்கு 7 நோயாளிகளில் 6 பேர் அனுப்பப்பட்டனர். டிசம்பர் 30, ஆம் திகதியே சீனாவின் வுகானிலிருந்து வைரஸ் வெடிப்பு பற்றிய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது. டிசம்பர் 31ம் திகதி 27 பாதிக்கப்பட்டவர்கள் காரணம் புரியாத நிமோனியா பாதிப்பாக மாற பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வுகானில் அதிகாரிகள் உத்தரவிட்டனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவிட்-19 காய்ச்சலை முதன் முதலில் கண்டுபிடித்து எச்சரித்த ஜாங் ஜிக்சியானுக்கு அவருக்குரிய மரியாதை செய்து அங்கீகரித்தது. எனினும், அவரோ, “நான் ஒரு தொழில்பூர்வமான மருத்துவராக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.