பிரான்ஸின் மிகப்பெரிய விமானந்தாங்கிக் கப்பலான சார்லஸ் டி கோல் சுமார் 6 நாட்களுக்கு முன்னர் பிரான்சுக்கு திரும்பியது. பிரான்சிற்கு திரும்ப முன்னர் கப்பல் கிருமிநீக்கம் செய்யப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
எனினும் அந்தக் கப்பலில் பணிபுரியும் கடற்படையினரில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியது உறுதியாகியுள்ளது. பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, சார்லஸ் டி கோல் மற்றம் அதன் துணை கப்பல்களில் இருந்த 2,300 பேரில் 1,081 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தெரிவித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சின் விமானந்தாங்கி கப்பலான சார்லஸ் டி கோல் கப்பலில் இருந்தவர்களில் ஒரு கடற்படை வீரர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். மேலும் 23 ரே் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கப்பலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும், விமானம் தாங்கிக் கப்பலின் தளபதி கப்பலில் பணியாளர்களிடையே சமூக இடைவெளியை அதிகரிக்க முயன்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் அங்கு சோதனை உபகரணங்கள் இல்லை. முகமூடிகள் இல்லை. நீண்ட நாள் கடலில் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது என பிரான்ஸ் கடற்படை பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
ஒரு போர் கப்பலில் சமூக இடைவெளி நடவடிக்கைகளை ஏற்படுத்துவது மிகவும் கடினம் என்றும் தெரிவித்தார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத்தின் சுகாதார சேவையின் தலைவர் ஆகியோர் நேற்றைய தினம் நாடாளுமன்ற விசாரணைக்குழுவின் முன் விசாரிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.