பிரித்தானியாவில் தாய் கொரோனாவால் இறந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மகளின் வருகைக்காக அவரின் உடல் பாதுகாக்கப்பட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Cambridgeshire-ல் வசித்து வந்தவர் அனுசுயா சந்திரமோகன்(இந்திய வம்சாவளி). இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருடைய மகளான ஜெனிபர் அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்ததால், அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இருவருமே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனுசுயா சந்திரமோகன் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் அவரின் மகள் ஜெனிபர் அம்மாவின் முகத்தை பார்க்க வேண்டும் என்பதால், உடலை பாதுகாக்க முடிவு செய்தனர்.
அதன் படி அங்கிருக்கும் சவ பராமரிப்பு மையத்தில் உடலை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
ஜெனிபர் குணமடைந்து வீடு திரும்பி வரும்வரை எவ்வளவு செலவானாலும் அனுசுயாவின் உடலை பாதுகாக்க தயாராக இருக்கிறோம் என்றும் அனுசுயாவின் உடலை அவரது மகள் ஜெனிபர் வந்துதான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.