Loading...
சமூகவலைத்தளங்களின் ஜாம்பவான் ஆன பேஸ்புக் பல்வேறு வகையிலான ஈமோஜிக்களை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.
பதிவுகளுக்கு ஏற்றவாறு எதிர்வினைகளை வழங்கக்கூடிய இந்த ஈமோஜிக்கள் அதிகமான பயன்படுத்தப்பட்டுவருவதுடன், மிகவும் பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றன.
இப்படியிருக்கையில் தற்போது மேலும் சில புதிய ஈமோஜிக்களை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Loading...
இதனை பேஸ்புக்கின் பிரதான அப்பிளிக்கேஷனில் மாத்திரமன்றி பேஸ்புக் மெசஞ்சரிலும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் Alexandru Voica என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இவை பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெறும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...