கொரோனா வைரஸ் தொற்றால் இங்கிலாந்தில் ஒரே நாளில் 888 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் 2,324,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 160,434 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் இங்கிலாந்தில் ஒரே நாளில் 888 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 888 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இங்கிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15, 464 ஆக அதிகரித்துள்ளது.