கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளதாக மதுவரித்திணைக்பளம் தெரிவித்துள்ளது.
நாங்கள் எதிர்பாரக்காத அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இத்தகைய நிலை கொவிட் 19 ஐ போன்றவை அல்ல.இந்த சூழ்நிலையில் சமூக இடைவெளி என்பது பின்பற்றப்படுவதில்லை என மதுவரித் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
குறிப்பாக சட்டவிரோத மதுபாவனை உற்பத்தி,விற்பனை அதிகரித்துள்ளது.
ஊரடங்கு நேரத்தில் அரச சாராயம் விற்பனை மற்றும் விநியோகம் என்பன தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான விசேட திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இதுவரை கைதானவர்களின் விபரத்தையும் மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.