பொதுமுடக்கத்தின் 33வது நாளில் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள சுகாதார அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 642ஆக பதிவாகியுள்ளதோடு, 30,639 பேர் மருத்துமனைகளில் சிகிச்சைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 833 பேர் தீவிரசிகிச்சை பிரிவில் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மருத்துமனைகளில் 324 மருத்துமனைகளில் பேரும், மூதாளர் இல்லங்களில் 278 பேரும் உயிரிழந்துள்ளதோடு, 206 பேர் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1 563 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதுவரை 173,956 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, இவர்களில் 19,323 பேர் உயிரிழந்துள்ளனர். 35,983 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
தற்போதைய நிலைவரம் என்பது தட்டையாக தொடருகின்ற உச்சநிலையாக காணப்படுவதோடு, வைரசின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மருத்துமனைகளிலும் (30,639) தீவிரசிகிச்சைப்பிரிவுகளிலும் (5,833) உள்ளவர்களின் எண்ணிக்கை என்பது பெருமளவில் குறையாது நீடித்து வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.