Loading...
ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுவுக்கு அடிமையானவர்களை இலக்காகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த விமலா என்ற 65 வயது மூதாட்டி, ராம்ஜிநகர் பகுதியில் டீ கேனில் கபசுர குடிநீர் என்ற பெயரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்.
Loading...
இதனையறிந்த பொலிசார் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர். கள்ளச்சாராயம் எங்கு காய்ச்சப்பட்டது, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...