உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் லூக் மான்டேனியர் கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஹெச்ஐவி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற மான்டேனியர், பிரெஞ்சுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த வைரஸ் உருவானதாக அவர் கூறியுள்ளார்.
ஹெச்ஐவி வைரஸின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டில் இருப்பதாகக் கூறும் மான்டேனியர் வுஹானில் உள்ள தேசிய உயிரிகாப்பக ஆய்வகத்தில் நடந்த விபத்தால் கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.