வெண்டிலேட்டர்களுக்காக உலக நாடுகள் பதறித் தவித்த நிலை மாறி, வெண்டிலேட்டர்களே கொரோனா நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் கொலைக்கருவிகளாய் மாறியிருக்கலாம் என நியூயார்க் மருத்துவர் ஒருவ சந்தேகம் எழுப்புகிறார்.
உலகமெங்கும் உள்ள பல மருத்துவர்கள் அவரது கருத்தை ஆதரிக்கிறார்கள். பிரித்தானிய ஆய்வு ஒன்றில் வெண்டிலேட்டருடன் இணைக்கப்பட்ட 98 கொரோனா நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் உயிரிழந்துவிட்டது கண்டறியப்பட்டுள்ளது.
நியூயார்க்கில், வெண்டிலேட்டர் இணைக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவிகிதம் பேர் குணமடையவில்லை.
மற்ற நாடுகளிலும் வெண்டிலேட்டர் இணைக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு வீதம் அச்சுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த இளம் மருத்துவரான Cameron Kyle-Sidell யூடியூப் வீடியோ ஒன்றில் வெண்டிலேட்ட்ரகள் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ் நோயாளிகள் தன் கண் முன்னாலேயே உயிரிழப்பதைக் கண்டு தவித்துப்போயிருக்கும் Cameron, எந்த வெண்டிலேட்டர்கள் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றும் என நம்பப்படுகிறதோ, அதே வெண்டிலேட்டர்களே அவர்கள் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று நம்புகிறார்.
வெண்டிலேட்டர்கள், நிமோனியாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுபவை.
நிமோனியா நோயாளிகளுக்கு முதலில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அதன் பிறகு கருவி ஒன்றின் உதவியுடன் ஒரு குழாய் அவர்களது சுவாசப்பாதைக்குள் செலுத்தப்படும். அதன்பின், அந்த குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்படும்.
சுவாசிக்க முடியாமல் சோர்ந்திருக்கும் நோயாளியின் நுரையீரலுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட, அவரது உடலுக்குள் ஆக்சிஜன் செல்லும்.
ஆனால், கொரோனா நோயாளிகளுக்கும் நிமோனியா நோயாளிகளுக்கும் வித்தியாசம் உள்ளதாக குறிப்பிட்ட அவர் கொரோனா நோயாளிகளால் சுவாசிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்