உலகெங்கும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், பிறந்து 45 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளமை, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளதுடன் பலியானோரின் எண்ணிக்கை 500 நெருங்குகின்றது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள கலாவதி சரண் குழந்தைகள் நல மருத்துவமனையிலேயே குறித்த பெண் குழந்தை கடந்த 14 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தது.
அக்குழந்தைக்கு ஏப்ரல் 16 ஆம் திகதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அக்குழந்தை இன்று உயிரிழந்துள்ளது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் 21 மாத குழந்தைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதேவேளை இந்தியாவில் கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.