வுகானின் ஆய்வுகூடத்திலிருந்தே வைரஸ் உற்பத்தியானது என முன்வைக்கப்படும் கருத்துகளை ஆய்வுகூடத்தின் இயக்குநர் நிராகரித்துளளார்.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போதுவரை 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக அமெரிக்கா பிரித்தானியா இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வுகூடமே என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வுகானின் ஆய்வுகூடத்திலிருந்தே வைரஸ் உற்பத்தியானது என முன்வைக்கப்படும் கருத்துகளை ஆய்வுகூடத்தின் இயக்குநர் நிராகரித்துளளார்.
இது தொடர்பில் ஆய்வுகூடத்தின் இயக்குநர் தெரிவிக்கையில்,
இந்த வைரஸ் எங்கள் மத்தியிலிருந்து உருவாவதற்கான வாய்ப்பேயில்லை. எனது பணியாளர்கள் எவரும் நோயினால் பாதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஆய்வகம் கொரோனவைரஸ் தொடர்பான பல்வேறுவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
வைரஸ் ஆய்வுகூடத்திலிருந்து வந்திருப்பதற்கான வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு அவர் இதற்கான வாய்புயில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் தொடர்பான பலவிதமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் என்ன ஆய்வினை மேற்கொண்டிருக்கின்றோம் என்பது எங்களிற்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர் வைரஸ் மாதிரிகளை எவ்வாறு நாங்கள் கையாள்கின்றோம் என்பதும் எங்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பி4 ஆய்வுகூடம் வுகானிலேயே உள்ளது என்பதால் பலர் இதனுடன் வைரஸ்பரவை தொடர்புபடுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ள வுகான் ஆய்வுகூடத்தின் இயக்குநர் யுவான் ஜிமிங் சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ள தகவல்களை ஆதாரமற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.