கனடாவில் பொலிஸ் வேடமிட்ட ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
கனடா நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலர் ஆளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்கொட்டியாவின் போர்டாபிக் நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். பொலிசார் போல் உடையணிந்து கொண்டு, பொலிஸ் வாகத்தை ஒத்த வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார். சுமார் 12 மணித்தியாலம் இவரது தாக்குதல் நீடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பெண் பொலிசார் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் ஹெய்தி ஸ்டீவன்சன் (23) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தேடுதல் வேட்டையில் பொலிசார் ஈடுபட்டனர். பொலிசார் வாகனங்களும், ஹெலிகொப்டர்களும் இந்த பணியில் ஈடுபட்டன. இதன்பின்னர் நகரின் என்பீல்டு என்ற இடத்தில் காஸ் நிலையத்தில் வைத்து அந்நபரை கண்டறிந்தனர்.
Thank you for you service. Const. Heidi Stevenson. pic.twitter.com/YZAJS47Gay
— Michael de Adder (@deAdder) April 19, 2020
பொலிசாரின் விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கப்ரியல் வொர்ட்மேன் (51) என தெரிய வந்துள்ளது. பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் அவரும் உயிரிழந்து விட்டார்.
கனடா வரலாற்றில் நடந்த கொடூரமான துப்பாக்கிச்சூடு இதுவென கூறப்படுகிறது.
Statement from Nova Scotia RCMP Commanding Officer, Assistant Commissioner Lee Bergerman https://t.co/mV9IcRqe2B pic.twitter.com/yRaL8F8EdS
— RCMP, Nova Scotia (@RCMPNS) April 19, 2020
வோர்ட்மேன் ஒரு பல் மருத்துவராக கனடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.