2011ம் ஆண்டு உலக கிண்ணத் தொடரின் போது அணித்தேர்வில் சுரேஷ் ரெய்னாவுக்கு டோனி முக்கியத்துவம் அளித்ததாக கூறியுள்ளார் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்.
இவர் மேலும் கூறுகையில், இந்திய கேப்டன்களிலேயே என்னை கவர்ந்தவர் சவுரவ் கங்குலி தான். மற்ற கேப்டன்களை காட்டிலும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்.
இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார்,
ஒவ்வொரு கேப்டனுக்கும் அணியில் செல்லப்பிள்ளையாக ஒருவர் இருப்பார், அப்படி டோனியின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் ரெய்னா.
அப்போது ரெய்னாவுக்கு அதிக ஆதரவு இருந்தது, ஏனெனில் டோனி அவருக்கு பக்க பலமாக இருந்தார் என தெரிவித்துள்ளார்.
மேலும் 2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ணப் போட்டியில் பயன்படுத்திய பேட்டும், 2011ம் ஆண்டு உலக கிண்ணத் தொடரில் பயன்படுத்திய பேட்டும் தனக்கு ஸ்பெஷலானது என தெரிவித்துள்ளார்.