கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது கடமைகளை மீளவும் ஆரம்பித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குணமடைந்த பிறகு வீடு திரும்பினார்.
இதனையடுத்து நீண்ட ஓய்வில் இருந்த அவர், தற்போது அரசாங்கப் பொறுப்பை கவனிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் பொரிஸ் ஜோன்சனை, வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், பொரிஸ் ஜோன்சனின் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ், தகவல் தொடர்பு இயக்குனர் லீ கெயின் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் பிரித்தானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.