உணவு சமைக்கும்போது அதில் மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவு சமைக்கும்போது அதிகம் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல், குளிர்ச்சியையும் தருகிறது.
இஞ்சியை உணவில் தினமும் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்னைகள் உருவாதில்லை.
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே சுத்தமான நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் குடிநீரில் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள சூட்டைக் குறைக்கிறது.
கடுகு தாளிப்பதால், உடலில் உள்ள உஷ்ணம் ஒரே அளவாக இருக்கும். வயிறு பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
உணவு உண்பதற்கு முன்பாக கை, கால், வாய், முதலியவற்றை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பாகவே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
உணவு உண்ணும் போது மற்றவரிடம் பேசக் கூடாது, படிப்பதும் கூடாது. இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டு உண்பது தவறான பழக்கமாகும்.
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட்டால் உணவில் மாசு கலக்கும்.
காலணி அணிந்து கொண்டு உண்பது உணவை அவமதிக்கும் செயலாகும். சூரிய உதயத்தின்போதும், மறையும்போததும் உணவு உண்ணக் கூடாது.
உணவு உண்ணும் போது உண்பதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து இணையதளம் முதலியவை சாப்பிடும்போது வேண்டாம்.
இருட்டிலும், நிழல்படும் இடங்களிலும் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடுவது கூடாது.
அதிக கோபத்துடன் இருக்கும்போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்பது தவறானது.
இலையைத் துடைத்தும் வழித்தும் சாப்பிடுவது, விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவது இவையெல்லாம் தரித்திரத்தை உண்டாக்கும்.
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது. ஏதாவது ஒரு பழம் சாப்பிடலாம்.
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உணவு உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது உணவின் நற்பலன்களை நமக்கு உருவாக்கும், தமிழர் பண்பாட்டைக் கடைபிடித்து உண்போம்.