Loading...
ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகிதநகர் கிராம சேவை அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை காகிதநகர் பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகரால் தாக்கப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவை அதிகாரிகளும் இன்று மதியம் தொடக்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தாக்கப்பட்ட கிராம சேவை அதிகாரியை தாக்கியவரை இதுவரை கைது செய்யாத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமசேவை அதிகாரிகளும் இன்று நண்பகல் முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
Loading...
இதேவேளை பாதிக்கப்பட்ட கிராம சேவை அதிகாரி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...