சீனாவில் இரண்டாவது கொரோனா அலையாக Henan மாகாணத்தில் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுகானில் பரவத் தொடங்கிய கொரேனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது Henan மாகாணத்தில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியிருப்பதாக Daily Express என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சீனாவின் Henan மாகாணத்தில் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளதால் அது இரண்டாவது கொரோனா அலையாக இருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக
Jia பகுதியில் உள்ள ’மக்கள் மருத்துவமனை’ ஊழியர்களிடையே இந்த தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒரு ஊழியர், கொரோனா உருவாகியதாக கருதப்படும் வுஹானில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்துவிட்டு இப்போதுதான் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கொரோனா பரவுவதையடுத்து அதிகாரிகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீடுகளிலிருந்து வெளியே வருவோர் மாஸ்க் அணிய அறிவிறுத்தப்படுவதுடன், அவர்களது உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள் மற்றும் விவசாய சந்தைகள் தவிர்த்து Jia பகுதியில் பிற தொழில்கள் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதேவேளை, சீன சமூக ஊடகமான Weiboவில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ள மக்களை மேற்கோள் காட்டி, சில விடயங்களை Daily Express பத்திரிகை வெளியிட்டுள்ளது.
எல்லாமே மூடப்பட்டுள்ளது, மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர், யாரும் நகருக்குள் போக முடியாது, அப்படியே போனால் அவ்வளவுதான், திரும்ப வரமுடியாது என்று கூறியுள்ளனர்.
ஒருவர், அரசின் நடவடிக்கைகளால் கொள்ளைநோய் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக பலர் கருதுகின்றனர், அது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
சீனாவில் முழுமையாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடடுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் வெளிப்படையாக தெரிவித்து வரும் நிலையிலேயே தற்போது இக்கருத்துக்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.