சுவிஸ்பாதிரியாரின் பாணியில் கொரோனாவை பரப்ப முற்படுவதாக பிரதேச செயலாளர் ஒருவர் மீது உத்தியோகத்தர்கள் கடுமையாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
பூநகரி பிரதேச செயலாளர் ஊரடங்கு தளர்த்தும் நேரத்தில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் 50% உத்தியோகத்தர்களை அலுவலகத்திற்கு சமுகம் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதற்கு எதிராக 20/04/2020 அன்று அனைத்து அலுவலர்களையும் கடமைக்கு அழைத்திருந்தார்.
மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்களில் ஒவ்வொரு நாளும் பூநகரி பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சமுகம் அளிக்கும் பெண் ஊழியர்கள் பல நெருக்கடியில் உள்ளார்கள்.
சீரான பஸ் சேவை இல்லாமையாலும் கொரோனா அச்சம் காரணமாக பாதுகாப்பாக அலுவலகத்திற்கு சமுகம் அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
மேலும் இவ்வாறன பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு பிரதேச செயலாளர் எந்த பாதுகாப்பான பயண ஒழுங்கையும் செய்து கொடுக்கவில்லை.
இது தொடர்பாக உத்தியோகத்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் பொறுப்பற்ற செயலால் ஊழியர் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் முழுப் பொறுப்பையும் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்பு கூறவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதைவேளை வெளிமாவட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களை பல பிரதேச செயலகங்கள் வேலைக்கு அழைக்காததோடு. இன்று சமுகம் அளித்தவர்களை மறு அறிவித்தல் வரும் வரை சமுகம் அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.