உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து நிறைய கேள்விகள், சந்தேகங்கள் பரவி வருகின்றது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து Wuhan Institute of Virology முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளது.
கொரோனா வைரஸ் இயற்கையானது என்றும் , வுஹான் சந்தையிலிருந்து இந்த வைரஸ் வெளியாகியுள்ளது என்று சீனா கூறி வருகிறது.
ஆனால் இந்த கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள Wuhan Institute of Virology ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து வெளியாகியிருக்கலாம் என குற்றம் சாட்டப்படுகிறது.
சீனாவிலுள்ள Wuhan Institute of Virology ஆய்வுகூடம் பயங்கரமான வைரஸ்களைக் கையாளுவதற்கான வசதிகளைக் கொண்டதாக இருக்கிறது. இங்கிருந்து வைரஸ் வெளியாகியிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
அத்துடன் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து அமெரிக்காவும் விசாரணைகளையும் தொடங்கியுள்ளது. சீனா இது தொடர்பான விஷயங்களை மறைக்கிறது. கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து சீனா வேண்டுமென்றே மறைத்திருந்தால் சீனா மிக மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டொனால்ட ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் Wuhan Institute of Virology ஆய்வு மையத்தின் P4 ஆய்வுகூடம் எனப்படும் பாதுகாக்கப்பட்ட ஆய்வு கூடத்திலிருந்துதான் இந்த வைரஸ் பரவியிருக்கும் என்று செய்திகள் பரவிய வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் சீனாவிலுள்ள CGTN TVக்கு வழங்கிய நேர்காணலில் Wuhan Institute of Virologyயின் P4 ஆராய்ச்சி கூடத்தின் பணிப்பாளரான யுவான் சிமிங் (Yuan Zhiming) தெரிவிக்கையில்,
இந்த கொரோனா வைரஸ் எங்கள் ஆய்வு கூடத்திலிருந்து கசிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும், எங்கள் ஆய்வு கூடத்தில் யாருக்கும் இதுவரை கொரோனா தாக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் தமது ஆய்வு கூடத்திலிருந்து இந்த வைரஸ் வெளியாகியிருக்கலாம் என்று கூறுவது தவறு எனக்கூறியுள்ள அவர், தாம் கொரோனா குறித்து நிறைய ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம்.
அத்துடன் பல்வேறு வகையான வைரஸ் ஆராய்ச்சிகளையும் செய்து வருவதுடன் தமது ஆய்வுகூடம் மிகவும் பாதுகாப்பானது என்றும், அங்கிருந்து எந்த விதமான வைரஸ் வெளியேறவும் வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ள அவர் தேவையில்லாமல் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் ஆய்வுகூடம் வுஹானில் இருக்கிறது என்பதாலேயே அதை கொரோனாவுடன் தொடர்பு படுத்த கூடாது என்றும் கூறிய அவர், மக்களை தவறாக சிலர் வழி நடத்துவதாக கூறியதுடன் அமெரிக்காவிலுள்ள சில ஊடகங்கள் ஆதாரமில்லாத பொய்யான செய்திகளை வெளியிடுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கொரோனா குறித்தோ அல்லது இந்த ஆய்வுகூடம் குறித்தோ மறைக்க ஒன்றும் இல்லை எம்க்கூறிய் அவர்,தாங்கள் பொதுவான வைரஸ் ஆராய்ச்சிகளை செய்து வருவதாகவும், இது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அறிக்கையும் சமர்பித்துள்ளதாகவும் P4 ஆய்வு கூடத்தின் பணிப்பாளர் யுவான் சிமிங் தெரிவித்துள்ளார்.