உலகளவில் இன்றுவரை கொரோனா தாக்கத்தால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையச் சேர்ந்த 80 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இவ்வாறு பலியானவர்களின் அனைவரது புகைப்படங்களை உற்றுப்பார்த்தால் வேதனை மிகுந்த ஒரு விடயம் புலப்படுகின்றது.
ஆம் இவர்களில் யாருமே , ஆங்கிலேயர்கள் இல்லை என சொல்லப்படுகின்றது.
இதேவேளை 300 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டன் நோக்கி வெளிநாட்டுப் படைகள் வந்தால், உடனே ஆங்கிலேயர்கள் அருகில் உள்ள அயர்லாந்து போர் வீரர்களையும், ஸ்காட்லன் போர் வீரர்களையும் ஒன்று திரட்டி. நாம் மூவரும் இணைந்து செல்வோம் என்று கூறுவார்களாம்.
ஆனால் படைகளில் முன் நிலைகளில் அவர்களை நிறுத்திவிட்டு. இவர்கள் மட்டும் பின்னே செல்வார்களாம். எதிரியின் படையணியில் வீழ்ந்து சாவது, அயர்லாந்து இனமும், ஸ்காட்லண்ட் இனமும் தான். ஆனால் மீதம் உள்ள எதிரிப் படைகளை வீழ்த்தி, தாம் வெற்றிகண்டதாக வரலாற்றை அவர்கள் எழுதுவார்கள்.
அதேபோல தான் கொரோனா கள முனைகளிலும் அவர்கள் நிற்பது இல்லை என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.