Loading...
தலவாக்கலை கதிரேசன் கோவிலுக்குள் இருந்த உண்டியல் நேற்றிரவு (19) களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இக்கொள்ளைச் சம்பவம் குறித்து ஆலய நிர்வாகம், தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் இன்று (20) முறைப்பாடு செய்ததையடுத்து, கள்வர்களைக் கைதுசெய்வதற்காக பொலிஸ் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
Loading...
கொடிக்கம்பம் நாட்டுவதற்காக கூரைப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இடைவெளி ஊடாகவே கொள்ளையர்கள் கோவிலுக்குள் நுழைந்து, உண்டியலை களவாடிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆலயத்தில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அதனை மாற்றியமைப்பதற்காக கழற்றி வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே இக்கொள்ளைச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
Loading...