Loading...
கொழும்பு நகரம் மற்றும் சனநெரிசல் மிக்க 5 பகுதிகள் தற்போது பலத்த கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த பகுதிகளுக்குள் நுழைவதற்கோ, அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கோ முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை – அருணாலோக மாவத்தை , மருதானை – ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை மற்றும் குணசிங்கபுர – மிஹிது மாவத்தை என்பன அதில் சில பகுதிகளாகும்.
Loading...
கொழும்பு , கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பலத்த கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள 31 குடும்பங்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ,ஏனையவர்கள் வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...