பிரான்ஸ் நாட்டில் தண்ணீரிலும் கொரோனா வைரஸ் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும்கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் இதுவரை 1.52லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் 20 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பை சந்தித்த நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருவதாகவும், தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக குணமானவர்களின் எண்ணிக்கை கணிசமாக அங்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸில் போர்க்கால அடிப்படையில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் குடிநீருக்கு பயன்படுத்தப்படாத கால்வாய் நீர் ஒன்றில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஏபிஎப் தெரிவித்துள்ளது.
பாரிஸ் நகரின் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாயிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அதை சுத்தப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவை கொஞ்சம் அசுத்தமாக இருப்பதால் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை. பூங்காங்கள் மற்றும் நகரின் நீருற்றுகள் போனற் தோட்டப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில அதிகாரிகளுக்கு திடீரென எழுந்த சந்தேகத்தின் பேரில் பாரிஸ் நீர் ஆணையத்தின் ஆய்வகம் பாரிஸில் உள்ள சீன் நதிமற்றும் எவர்க் கால்வாய் தண்ணீரை 27 மாதிரிகளை எடுத்து சோதித்தனர். அதில் நான்கில் நான்கில் சிறிய அளவிலான கொரோனா வைரஸைக் கண்டறிந்தது,
மேலும் முன்னெச்சரிக்கையாக கால்வாய்கள் மூடப்பட்டது. சீன் நதி போன்ற குடிக்க முடியாத கால்வாய் நீர்கள் தோட்டக்கலை மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதில் தான் கொரோனா இனத்தைச் சேர்ந்த புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்தனர். உடனடியாக தண்ணீரை தூய்மை படுத்தும் பணிகளை மேற்கொள்ள பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. தண்ணீரிலும் கொரோனா வைரஸ் இருந்தது பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.