ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தை நாளை முதல் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தப்படும் என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது.
உலக நாடுகளை நாசமாக்கி வரும் கொரோனா தொற்று நோயை தடுப்பதற்கான மருந்துகளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞான உலகம் முழு வீச்சில் இயங்கி வருகிறது
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த முயற்சி நிறைவடைந்த நிலையில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தப்படு என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இந்த சோதனை நாளை வியாழக்கிழமை முதல் மனிதர்களிடம் நடத்தப்படும் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் அறிவித்துள்ளார்.
“தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு இங்கிலாந்து அரசு அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஒக்ஸ்போர்ட் குழுவினருக்கும் இம்பீரியல் கல்லூரி குழுவினருக்கும் நிதி உதவியை இங்கிலாந்து அரசு அளித்திருக்கிறது என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.