Loading...
கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெறும் மிகப்பெரிய பீர் திருவிழா கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பவேரியா மாகாண தலைநகர் முனிச் நகரில் ஆண்டுதோறும் ‘அக்டோபர்பெஸ்ட்’ என்ற பெயரில் பீர் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான பீர் திருவிழா இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Loading...
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் இந்த பீர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக பவேரியா மாகாணத் தலைவர் மார்கஸ் சோடர் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு செப்ரெம்பர் 18 முதல் பீர் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Loading...