உலகமெங்கும் பரவும் கொரோனா வைரஸால் இலங்கையர்கள் பலரும் பல நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
இவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அமைவாக அவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணியில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் அண்மை நாட்களாக வெளிநாடுகளில் இருந்து பலர் ஸ்ரீலங்கா வந்த வண்ணம் இருக்கின்றார்கள்.
எனினும் குறிப்பிட்ட சிலர் இலங்கை வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.
அந்த வகையில் மாலைதீவில் இருக்கும் ஸ்ரீலங்கா நபர்கள் குறித்து தற்போது செய்தி வெளிவந்துள்ளது.
மாலைதீவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஆபத்தில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இவர்கள் மாலைதீவில் வெளியில் வர முடியாமல் இருப்பதாகவும், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் சிரமப்படுவதகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அங்கிருக்கும் பல இலங்கையர்கள் தம்மை இலங்கைக்கு அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விமானம், கப்பல் அல்லது படகு மூலமாவது தம்மை நாட்டுக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த வகையிலாவது தம்மை ஸ்ரீலங்காவுக்கு அழைக்குமாறும், உணவின்றி, நீர் இனறி தாம் ஒரு அறையில் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தம்மை ஸ்ரீலங்காவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.