லண்ட நீதிமன்றம் விஜய் மல்லைய தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததை அடுத்து, அது தனக்கு ஏமாற்றம் அளித்துவிட்டதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில், உள்ள வங்கிகளில் இருந்து 900 கோடி கடன் பெற்றக்கொண்ட விஜய் மல்லையா அதை திருப்பி வழங்காமல் 2012ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்றார்.
இதனை அடுத்து, இந்திய அரசு சார்பில், லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில், தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
இது குறித்து விஜய் மல்லையா நான் ஏமாற்றமடைந்துள்ளேன். இது தொடர்பாக சட்டப்படி தீர்வுகள் நோக்கி நகர்வேன். என்று குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக விஜய் மல்லையாவின் இந்தியாவில் உள்ள 2500கோடி சொத்துக்களை வங்கிகள் கையகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
I am naturally disappointed with the High Court decision. I will continue to pursue further legal remedies as advised by my lawyers. I am also disappointed with the media narrative which states that I must face trial in India for a fraud of Rs 9000 crores.
— Vijay Mallya (@TheVijayMallya) April 20, 2020