உலகம் முழுவதிலும் ஒரு இலட்சத்து 79 ஆயிரம் பேர் இன்றுவரை கொரோனா வைரஸிற்குப் பலியாகியிருக்கின்றனர். தொற்று ஏற்பட்டவர்களின் தொகை 25 இலட்சத்தைக் கடந்திருக்கிறது.
பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை 763ஆக அதிகரித்திருக்கிறது.
இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்சமயம் 18100ஆக பதிவாகியுள்ளது.
இங்கிலாந்தில் இன்றுமட்டும் 665 பேர் பலியாகியுள்ளதுடன், ஸ்கொட்லாந்தில் 77 பேரும், வேல்ஸில் 15 பேருமாக உயிரிழந்திருக்கின்றனர்.
இதேவேளை ஸ்பெயினிலும் கொரோனா பலி தொகை 21717ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் 45382 பேரும், இத்தாலியில் 24648 பேரும், பிரான்ஸில் 20796 பேரும், ஜேர்மனில் 5100 பேரும், ஈரானில் 5391 பேரும், துருக்கியில் 2259 பேரும், இந்தியாவில் 652 பேரும், கொரோனா வைரஸிற்கு பலியாகியுள்ளனர்.