சீனாவின் வுஹானில் ஆரம்பமான கொரோனாவால் உலகமே சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் சீனாவில் ஒரு நிறுவனத்தில் முத்தப் போட்டி நடத்தியிருக்கிறார்கள்.
இது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், இது தொடர்பில் கடும் விமர்னங்கள் எழுத்துள்ளன.
சீனாவின் வூஹானில் கொரோனா தோன்றி உலக நாடுகளுக்கும் பரவியுள்ள நிலையில் வைரஸை அடக்க முடியாமல், இதற்கு மருந்ததை கண்டுபிடிக்கவும் முடியாமல், செத்து மடியும் மக்கள் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வரவும் முடியாமல் உலகமே ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் ,சீனா இப்போது பழையபடி வர்த்தகம், வேலை, வியாபாரத்தில் இறங்கிவிட்டது. அத்துடன் இதைவிட கொடுமை, நோயை பரப்பிய இதே சீனாவிடம்தான் மாஸ்க் முதல் டெஸ்ட் கிட்கள் வரை உலகமே வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தாங்கள் வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்று கூறியதுடன் சந்தைகளில் பூனை, பாம்பு என வரிசைப்படுத்தி கடைவிரித்து லாபம் பார்க்க தொடங்கிவிட்டனர் சீனர்கள்.அதோடு மூடப்பட்ட தொழிற்சாலைகள் திரும்பவும் இயங்க தொடங்கிவிட்டன.
இந்நிலையில் சுஷோ என்ற ஊரில் யூயேயா என்கிற பர்னிச்சர் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடைக்காரர் தனது ஊழியர்களுக்கு ஒரு முத்தப் போட்டியை வைத்துள்ளார்.
அதில் கலந்து கொண்டு ஊழியர்கள் சரமாரியாக முத்தம் கொடுத்துக் கொண்டனர். ஆனால் இந்த முத்தம் கொடுத்துக் கொண்டவர்களில் யாருமே கணவன் மனைவி கிடையாது. முத்தம் கொடுத்துக் கொண்டவர்களுக்கு நடுவே கண்ணாடியை வைத்து விட்டனர். அதாவது ஆணும் பெண்ணும் கண்ணாடிக்குத்தான் முத்தம் கொடுத்துக் கொண்டனர்.
இது எதுக்கு இப்படி ஒரு போட்டி என்று கேட்டதற்கு, ஊழியர்களுக்கு கொரோனாவைரஸ் காரணமாக மன அழுத்தம், சோர்விலிருந்து மீண்டு தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள இது உதவும் என கடை ஓனர் விளக்கம் அளித்துள்ளார்.. குறித்த வீடியோ தற்போது சீனாவின் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த நிலையில் அதற்கு பெரும் கண்டனங்களையும் குவித்து வருகிறது.
இப்போதுதான் கொரோனாவைரஸிலிருந்து மெதுவாக மீண்டு வந்திருக்கிறோம். அதற்குள் சமூக இடைவெளியைக் குலைக்கும் வகையில் ஏன் இப்படி ஒரு முத்தப் போட்டி. . இதனால் நோய் மீண்டும் பரவாதா என பலர் திட்டித் தீர்த்து வருகின்றனர்.