பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 589 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், ஐரோப்பாவில் அதிக உயிரிழப்புகளை சந்திந்து வரும் நாடாக மாறி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் ஒரு லடசத்து 30-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 18-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொடிய நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் தலைமை மருத்துவ ஆலோசகர் கிறிஸ் விட்டி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிரித்தானியவில், தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது.
ஊரடங்கால் ஓரளவு பயன் கிடைத்துள்ளது. ஆனால், வாழ்க்கை உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என எதிர்பார்ப்பது முழுக்க, முழுக்க சாத்தியமில்லாதது.
மிகவும் பயன்தரத்தக்க தடுப்பூசி அல்லது மருந்துகளே தற்போதுள்ள சூழ்நிலையை மாற்றக் கூடிய வல்லமை படைத்தவை. ஆனால் அடுத்த ஆண்டிற்குள் அவற்றை கண்டறியும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.
இதனால், சில சமூக விலக்க கட்டுப்பாடுகள், இந்த ஆண்டு இறுதிவரை பிரிட்டனில் தொடர வேண்டும். அப்போது தான் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 589 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 763 பேர் உயிரிழந்திருந்தனர்.
இங்கிலாந்தில் இன்று மட்டும் 514 பேர் இறந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் 58 பேர் இறந்தனர், வேல்ஸில் 17 பேர் பதிவாகியுள்ளனர். வடக்கு அயர்லாந்து தனது புதிய இறப்பு எண்ணிக்கையை இன்னும் வெளியிடவில்லை.
மூன்று நாடுகளிலிருந்து (வடக்கு அயர்லாந்து உட்பட) ஒருங்கிணைந்த தினசரி இறப்பு அதிகரிப்பு 589 ஆக உள்ளது.
இந்த மரணங்கள் அனைத்தும் இங்கிலாந்து முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நிகழ்ந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டிலோ, பராமரிப்பு வசதிகளிலோ, மருத்துவமனைகளுக்கு வெளியே உள்ள பிற இடங்களிலோ இறக்கும் மக்களை கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.
தற்போது வரை மட்டுமே பிரித்தானியாவில் மொத்தமாக 18,797-பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த எண்ணிக்கைகளை எல்லாம் சேர்த்தால் 20,000-ஐ தாண்டிவிடும், இதனால் கொரோனாவால் ஐரோப்பாவில் அதிக உயிர்களை பலி கொண்ட நாடுகளின் வரிசையில் பிரித்தானியா முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே நாட்டின் சுகாதார செயலாளர் பிரித்தானியா கொரோனாவின் உச்சத்தில் இருப்பதாக கூறியிருந்தார். ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயினில் 22,157 பேரும், இத்தாலியில், 25,085 பேரும், பிரான்ஸில் 21,340 பேரும், இதற்கு அடுத்த படியாக பிரித்தானியா தற்போது உள்ளது, இதே நிலை நீடித்தால் 25,000-யும் தாண்ட வாய்ப்புள்ளது.